வெள்ளக்காடாக மாறிய மார்செய்! - எச்சரிக்கை!!

4 புரட்டாசி 2024 புதன் 18:31 | பார்வைகள் : 9477
மார்செய் (Marseille) மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு இதுவரை 50 மில்லிமீற்றர் மழை பதிவானதாகவும், இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்யும் எனவும், அதிகபட்சமாக 150 மில்லிமீற்றர் மழை பதிவாகும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
பல பகுதிகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளன. போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.
இடி மின்னல் தாக்குதல்களும், மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1