ரஷ்யாவின் அடுத்த இலக்கு நேட்டோ நாடுகள்
5 புரட்டாசி 2024 வியாழன் 08:34 | பார்வைகள் : 2680
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பல மாதங்களை கடந்துள்ளது.
நேட்டோ மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுக்க வாய்ப்பிருப்ப்பதாக குறிப்பிட்டு பீரங்கி குண்டுகளின் உற்பத்தியை அதிகரிக்க போலந்து முடிவு செய்துள்ளது.
போதுமான இருப்பை உறுதி செய்யும் வகையில் 155 மிமீ பீரங்கி குண்டுகள் உற்பத்தியை அதிகரிக்க போலந்து தயாராகியுள்ளது.
ஐந்து முதல் எட்டு ஆண்டுகளில் நேட்டோ நாடுகளை தாக்குவதற்கு ரஷ்யா இராணுவ ரீதியாக தயாராக இருக்கலாம் என்று சில நேட்டோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் போருக்கு பின்னர், ரஷ்யாவின் அடுத்த இலக்கு நேட்டோ நாடுகள் என்றே அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், மேற்கத்திய நாடுகளின் இந்த விவாத கருத்துக்கு ரஷ்யா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளது.
அடுத்த ஐந்து முதல் 8 ஆண்டுகளில் போலந்தின் கிடங்குகளில் போதுமான அளவு ஆயுதங்களை இருப்பு வைப்பதே முறை என முதன்மை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 பெப்ரவரி மாதம் உக்ரைன் மீதான போர் தொடங்கியதன் பின்னர் 155 மிமீ பீரங்கி குண்டுகளின் தேவை அதிகரித்தது.
உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்ததால் தற்போது தங்கள் பாதுகாப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது.
மேலும், ஆண்டுக்கு 100,000 எண்ணிக்கையை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் முக்கிய பொருள் ஒன்று பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வாங்கவும் போலந்து முடிவு செய்துள்ளது.