பிரதமர் Michel Barnier! - சில சுவாரஷ்யமான தகவல்கள்!!
5 புரட்டாசி 2024 வியாழன் 19:00 | பார்வைகள் : 5189
நாட்டின் புதிய பிரதமராக Michel Barnier இன்று அறிவிக்கப்பட்டார். அவர் குறித்த சில சுவாரஷ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரான்சில், ஐரோப்பிய அரசியலிலும் நீண்ட நாட்களாக பயணித்து வருகிறார் Michel Barnier.
ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து பிரிந்து செல்ல திட்டமிட்டபோது, பல்வேறு தரப்பட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அதனை தடுத்து நிறுத்த போராடியவர்களில் இவர் முக்கியமானவர். (2016 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்)
வலதுசாரியான ரீபபுளிகன் கட்சியைச் சேர்ந்த இவர் பிரான்சில் விவசாய அமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர், தனது ரீபபுளிகன் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால் அதில் தோல்வியுற்றார்.
பதவி விலகியுள்ள கப்ரியல் அத்தால், ஐந்தாம் குடியரசின் மிக இளம் வயது பிரதமராவார். 73 வயதுடைய Michel Barnier, ஐந்தாம் குடியரசின் வயதான பிரதமராவார்.
பிரான்சின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2027 ஆம் ஆண்டு இடம்பெற உள்ளது. மீதமிருக்கும் மூன்று ஆண்டுகளிலும் சிறப்பான அரசாங்கத்தை Michel Barnier வழிநடத்துவார் என எலிசே மாளிகை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.