Bois de Vincennes : பல்வேறு பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட ஒருவர் கைது!

6 புரட்டாசி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 6161
நபர் ஒருவர் கடந்த சில மாதங்களாக பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். Bois de Vincennes பூங்காவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி நபர் ஒருவர் Bois de Vincennes பூங்காவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களில் பல பெண்களை தாக்கி அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Val-de-Marne மாவட்டத்தைச் சேர்ந்த 1978 ஆம் ஆண்டு பிறந்த 46 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் முன்னதாக 2015 ஆம் ஆண்டில் Assize குற்றவியல் நீதிமன்றத்தினால் இதேபோன்ற பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் இவ்வாண்டு தொடக்கத்தில் விடுதலையான அவர் மீதும் அதே குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் 7 பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.