Paristamil Navigation Paristamil advert login

திரிணமுல் சர்வே முடிவால் அதிர்ச்சியில் மம்தா!

திரிணமுல் சர்வே முடிவால் அதிர்ச்சியில் மம்தா!

6 புரட்டாசி 2024 வெள்ளி 07:20 | பார்வைகள் : 598


மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சி மீது மக்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிருப்தியை ஏற்பட்டிருப்பது, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது

சம்பவம்

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதுவரை இந்த சம்பவத்தில் எந்த தீர்வும் கிடைக்காததால், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மீது அதிருப்தி அலை நிலவி வருகிறது. அதுமட்டுமில்லாமல், இந்த விவகாரத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்கள் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை உண்டாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.


கொந்தளிப்பு

இதனிடையே, லஞ்சம் கொடுத்து வழக்கை போலீசார் மூடி மறைக்க முயற்சி செய்வதாக பெண் டாக்டர் குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருப்பது மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


சர்வே

இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் எடுக்கப்பட்ட சர்வேயில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இருந்து அடிக்கடி மக்களிடையே சர்வே எடுப்பதை திரிணமுல் காங்., வழக்கமாக கொண்டுள்ளது.

பின்னடைவு

அந்த வகையில், தற்போது எடுக்கப்பட்ட சர்வே அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.ஜி.,கர் மருத்துவமனையின் டீன் சந்தீப் கோஷ் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி தயக்கம் காட்டுவதாக அவரது கட்சியினர் மத்தியிலும் அதிருப்தி நிலவுகிறது.

இந்நிலையில், பெண் டாக்டர் கொலை வழக்கில் விசாரணையை முன்னெடுக்காமல், பணம் கொடுக்க முயற்சித்ததாக குற்றம்சாட்டிருப்பது, யாரையோ காப்பாற்றும் செயல் என்று சொல்லப்படுகிறது. இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு மம்தா பானர்ஜிக்கு எதிரான மனநிலை மக்களிடையே எழுந்துள்ளது.

முன்னாள் திரிணமுல் அமைச்சர்களான பார்த்தா சாட்டர்ஜி, ஜோதிப்ரியா மல்லிக் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களிடையே அதிகம் பேசப்பட்டுள்ளது.


அதிருப்தி

கோல்கட்டா டாக்டர் கொலை சம்பவம் தொடர்பான தாக்கம் நகர்புறங்களில் மட்டுமல்லாது, கிராமப்புறங்களிலும் எதிரொலித்து வருவது சர்வே மூலம் தெரியவந்துள்ளது. இந்த முடிவுகளால் மம்தா கடும் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'சந்தீப் கோஷ் போன்ற குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி செயல்படுவது ஏன் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை' என்று, பெயர் வெளியிட விரும்பாத திரிணமுல் காங்கிரஸ் மூத்த நிர்வாகியே தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்