குரங்கு அம்மை தடுப்பூசியின் முதல் தொகுதியை பெற்ற ஆபிரிக்கா
6 புரட்டாசி 2024 வெள்ளி 08:34 | பார்வைகள் : 1770
குரங்கு அம்மை தடுப்பூசியின் முதல் தொகுதியை ஆபிரிக்காவில் காங்கோவிற்கு சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டென்மார்க் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த கையிருப்பில் 100,000 தடுப்பூசிகள் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் 12 ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மையால் உலகளாவிய அவசரநிலையாக அறிவித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு தடுப்பூசிகளின் கையிருப்பு காங்கோ தலைநகருக்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது