ஊழியர்கள் டேட்டிங் செல்ல விடுமுறை தரும் தாய்லாந்து நிறுவனம்

6 புரட்டாசி 2024 வெள்ளி 12:49 | பார்வைகள் : 6064
தாய்லாந்தைச் சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம் ஒன்று தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கூறியதை அடுத்து அந்நிறுவனம் இந்த முடிவை அறிவித்துள்ளது.
காதல் செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும், இது உற்பத்தியை அதிகரிக்க உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1