ரஷ்யா மீது டிரோன்கள் மூலம் சரமாரி தாக்குதல் நடத்திய உக்ரைன்

3 ஆவணி 2024 சனி 14:33 | பார்வைகள் : 6585
ரஷ்யா- உக்ரைன் எல்லையில் உள்ள ரஷியப் பகுதிகளில் உக்ரைன் நேற்றிரவு சரமாரியாக டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் 75 டிரோன்களை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.
பெல்கோரோட், கிராஸ்னோடர், கர்ஸ்க், ஓரியல், ரோஸ்டவ், வொரோனேஸ் உள்ளிட்ட பிராந்தியங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
ரோஸ்டவ் பிராந்தியத்தில் மட்டும் 36 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரோஸ்டவ் கவர்னர் வாசிலி கொலுபெவ், 55 டிரோன்களால் ரோஸ்டவ் தாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
எத்தனை டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எத்தனை டிரோன்களை இலக்கை தாக்கியது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை.
மோரோசோவ்ஸ்க், கமென்ஸ்கி மாவட்டங்களில் உள்ள ஆயுதகிடங்குகள் சேதம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
பெல்கோரோட் கவர்னர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ், ஆயில் டெப்போ பாதிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
ஒரு டேங்க் வெடித்து சிதறியதாகவும், வேகமாக மற்றவற்றை வெளியேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓரியல் பிராந்திய கவர்னர், இரண்டு டிரோன்கள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மோதி தீ விபத்து ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1