Paristamil Navigation Paristamil advert login

ஈரானின் பதற்றம் - யூத சமூகத்திற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!!

ஈரானின் பதற்றம் - யூத சமூகத்திற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!!

3 ஆவணி 2024 சனி 21:43 | பார்வைகள் : 9167


ஹமாசின் தலைவர் ஒருவர் ஈரானில் வைத்துக் கொல்லப்பட்டதால், பெரும் பதற்ற நிலை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ளது. 

இஸ்ரேலின் மீது தாக்குதல் ஏற்படலாம் என்ற அச்சத்தில், பிரான்சில் உள்ள யூத சமூகத்தின் பாடசாலையிலிருந்து, மதஸ்தலங்கள் மற்றும் நிறுவனங்கள் என, யூத மக்கள் கூடும் அனைத்து இடங்களிற்கும், பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு, அவசர ஆணையொன்றை உள்துறை அமைச்சர்  மிகவும் அவசரமாக, அணைத்து மாவட்டக் காவற்துறைத் தலைமையகத்திற்கும் அனுப்பியுள்ளார்.

எந்தத் தாமதமும் இன்றி உடனடியாகப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் இந்த ஆணை தெரிவித்துள்ளது.

அத்துடன் ஈரானிலிருந்து உடனடியாக பிரெஞ்சுமக்களை வெளியேறும்படி வெளிவிகார அமைச்சகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்