தங்கம் வென்ற ஜூடோ அணி.. 41 பதக்கங்களுடன் பிரான்ஸ்..!

3 ஆவணி 2024 சனி 22:28 | பார்வைகள் : 7802
நேற்று சனிக்கிழமை ஒலிம்பிக் போட்டிகளின் எட்டாம் நாள் முடிவில் 41 பதக்கங்களுடன் பிரான்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பிரெஞ்சு ஜூடோ அணி ஜப்பான் அணியை 4-3 எனும் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. பிரெஞ்சு சாம்பியன் Teddy Riner தலைமையில் இந்த தங்கப்பதக்கத்தை அணி வென்றிருந்தது. இது பிரான்சுக்கான 12 ஆவது தங்கப்பதக்கமாகும்.
அத்தோடு, நேற்றைய நாளில் இரண்டு வெள்ளி இரண்டு வெண்கல பதக்கங்களையும் பிரான்ஸ் வென்றிருந்தது.
மொத்தமாக பிரான்ஸ் 12 தங்கம், 14 வெள்ளி, 15 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1