Paristamil Navigation Paristamil advert login

பரிசில் திடீரென கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்...!!

பரிசில் திடீரென கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்...!!

4 ஆவணி 2024 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 2502


தலைநகர் பரிசில் நேற்று சனிக்கிழமை இரவு நூற்றுக்கணகான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றிணைந்து, ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

அமெரிக்க-கனடாவைச் சேர்ந்த சேர்ந்த Paul Watson எனும் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவரை விடுவிக்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. கப்பல் ஒன்றின் 'கப்டன்' என தெரிவிக்கப்படும் இவர், ஜூலை 21 ஆம் திகதி கிரீன்லாந்தின் Nuuk துறைமுகத்தில் அவரது கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். ஜப்பான் விடுவித்திருந்த சர்வதேச பிடியானையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

73 வயதுடைய Paul Watson, சர்வதேச சந்தைகளில் இடம்பெறும் வியாபார மாஃபியாவுக்கு எதிராக செயற்பட்டு, சமூக ஆர்வலர்களை தூண்டி பல்வேறு வன்முறை நிறைந்த ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரை விடுவிக்க கோரி பரிசில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கைதினால் பிரான்சுக்கும் ஜப்பானுக்குமிடையே பிணக்கு வரலாம் என அவர்கள் அஞ்சுவதாகவும் தெரிவித்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்