Ormesson-sur-Marne : அல்லா அக்பர் என கோஷமிட்டுக்கொண்டு காவல்துறை வீரர் மீது தாக்குதல் முயற்சி!

4 ஆவணி 2024 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 5525
Ormesson-sur-Marne (Val-de-Marne) நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் ஆயுதத்துடன் நுழைந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Pince-Vent வணிக வளாகத்துக்குள் கத்தி ஒன்றுடன் நுழைந்த ஒருவர் அங்கிருப்பவர்களை அச்சுறுத்தியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள், குறித்த நபரைக் கைது செய்ய முற்பட்டனர்.
அதன் போது ’அல்லா அக்பர்’ என கோஷமிட்டுக்கொண்டு கத்தியினால் காவல்துறையினரை தாக்க முற்பட்டுள்ளார். அதனை அடுத்து காவல்துறையினர் EPP எனப்படும் மின்சாரம் தாக்கும் துப்பாக்கியினால் அவரை சுட்டு வீழ்த்தி கைது செய்தனர்.
கைது சம்பவத்தின் போது, அவருடன் மேலும் பலர் அங்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து வணிக வளாகம் முற்றாக சோதனையிடப்பட்டது. ஆனால் சந்தேகத்துக்கிடமான எவரும் அங்கு இருக்கவில்லை.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
(Val-de-Marne).