Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டவர்களுக்கு குடியேற்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்தோனேசியா

வெளிநாட்டவர்களுக்கு குடியேற்ற கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்தோனேசியா

4 ஆவணி 2024 ஞாயிறு 08:21 | பார்வைகள் : 2178


இந்தோனேசியாவின் பாலி நகரத்திற்கு குடியேற்ற கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் பாலிக்கு வருகைத்தந்தவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதனால் இந்தோனேசியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஆண்டின் முதல் 7 மாதத்தில் பாலிக்குப் போன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 3.89 மில்லியனானது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் இது ஒரு மில்லியனுக்கு அதிகமாகும். அதற்கமைய, இனிமேல் கடவுச்சீட்டு விசா அனுமதி, குடியிருப்பு அனுமதி முதலியவை தீவிரமாகச் சோதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையில் முக-அடையாள தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது.

பாலியின் Ngurah Rai அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் அது பொருந்தும் என குறிப்பிடப்படுகின்றது.

சட்ட, மனித உரிமை அமைச்சுக்கான பாலி வட்டார அலுவலகம் அதனைத் தெரிவித்ததுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்