Paristamil Navigation Paristamil advert login

ராகி சாக்லேட் பேன்கேக்

ராகி சாக்லேட் பேன்கேக்

4 ஆவணி 2024 ஞாயிறு 10:23 | பார்வைகள் : 748


ராகியில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் உள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். நம் வீட்டிலேயே ராகி மாவில் எப்படி சுவையான சாக்லேட் பேன்கேக் செய்வதென இப்போது பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள்:

ராகி மாவு – ஒரு கப்

கோகோ பவுடர் – இரண்டு டீ ஸ்பூன்

சர்க்கரை – ஒரு டீ ஸ்பூன்

பேக்கிங் பவுடர் – ஒரு டீ ஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

முட்டை – ஒன்று

பால் – ஒரு கப்

உருக்கிய வெண்ணெய் – ஒரு டீ ஸ்பூன்

வென்னிலா – ஒரு டீ ஸ்பூன்

சாக்லேட் சிப்ஸ் – அரை கப்

தேன் – ஒரு டீ ஸ்பூன்

ஃபிரெஷ்ஷான நறுக்கிய பழங்கள் – ஒரு கையளவு

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நாம் கூறிய அளவுமுறைகளில் ராகி மாவு, கோகோ பவுடர், சர்க்கரை, பேக்கிங் பவுடர் ஆகிய அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். இதோடு கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாகவும் பிசைந்து கொள்ளவும்.

 இப்போது இன்னொரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நம் கூறிய முட்டை, பால், உருக வைத்த வெண்ணெய், வென்னிலா ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

 இப்போது இரண்டு பாத்திரங்களில் உள்ள கலவைகளையும் ஒன்றாக சேர்த்து மிருதுவான பதம் வரும் வரை நன்றாக கிளறவும். முக்கியமாக இந்த மாவு கட்டியாகாமல் பார்த்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பேன்கேக் நன்றாக வரும். இந்த சமயத்தில் கலக்கி வைத்த மாவில் சாக்லேட் சிப்ஸ்களை சேர்க்கவும்.

 அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து நான் ஸ்டிக் பேனை சூடுபடுத்திக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் வெண்ணெயை சேர்த்த பிறகு, நீங்கள் கலக்கி வைத்த மாவை தோசை சைஸுக்கு ஊற்றுங்கள்.

ஒரு பக்கம் வெந்ததும் அடுத்த பக்கத்தை திருப்பி போடுங்கள். தயவுசெய்து ஒரு பக்கம் மட்டும் வேக வைக்காதீர்கள். அவ்வுளவுதான், சுவையான ராகி சாக்லேட் பேன்கேக் ரெடி. சில ஃபிரெஷ்ஷான நறுக்கிய பழங்களை இதன் மேல் இட்டு, சூடாக பரிமாறுங்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக இதை கொடுக்கலாம். இதில் சாக்லேட் சேர்த்துள்ளதால் அவர்களும் ருசித்து உண்பார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்