‘சலீம்’ படத்தின் அடுத்த பாகமா "மழை பிடிக்காத மனிதன்,?

5 ஆவணி 2024 திங்கள் 11:27 | பார்வைகள் : 4863
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், எடிட்டர் என பன்முகத்திறமை கொண்டு வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக கலக்கி வந்த இவர், 2012 ஆம் ஆண்டு வெளியான நான் படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க அடுத்தடுத்து சலீம், இந்தியா பாகிஸ்தான், யமன், சைத்தான், அண்ணாதுரை, காலி, கொலைகாரன் போன்ற படங்களில் நடித்தார். இதில் சில படங்கள் அவருக்கு கைகொடுக்க சில படங்கள் தோல்வியடைந்தது. பிச்சைக்காரன் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனிக்கு அந்த படம் கை கொடுக்க, அதன் இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்கினார்.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதன் காரணமாக சிறு இடைவேளைக்கு பிறகு விஜய் மில்டன் ‘மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்த விஜய் ஆண்டனி அந்த படத்திற்கு தானே இசையமைத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன் படம் வெளியாகி இயக்குநருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சென்சார் நிறைவு செய்தபின் ரிலீஸின் போது படத்தின் ஆரம்பத்தில் 2 நிமிட காட்சி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரத்தை அந்த கட்சி ஆரம்பத்திலேயே வெளிப்படுத்திவிட்டதால், ஒட்டுமொத்த படமும் சொதப்பிவிட்டதாக இயக்குநர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
விஜய் ஆண்டனிக்கு தயாரிப்பு தரப்பிற்கும் இடையே இருந்த பிரச்சனை காரணமாகத்தான் படத்தில் அந்த 2 நிமிட காட்சி சேர்க்கப்பட்டதாகவும் பல சர்ச்சைகள் கிளம்பியது.
இயக்குநரின் புகாரின் அடிப்படையில் படத்தில் இருந்த அந்த ஒரு நிமிட காட்சி ஒருவழியாக நீக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் நடிகர் விஜய் ஆண்டனி தற்போது அந்த ஒரு நிமிட காட்சி குறித்து அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் பதிவில், ‘மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் அந்த இரண்டு நிமிட காட்சியை தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைந்துவிட்டதாக எனது நண்பரும் இயக்குநருமான விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1