Paristamil Navigation Paristamil advert login

ஈரான் நாட்டுடன் போருக்கு  தயாராகும் இஸ்ரேல் -  உருவாகும் அபாயம்

ஈரான் நாட்டுடன் போருக்கு  தயாராகும் இஸ்ரேல் -  உருவாகும் அபாயம்

6 ஆவணி 2024 செவ்வாய் 09:38 | பார்வைகள் : 1374


ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவரான Ismail Haniyeh என்பவர் கொல்லப்பட்ட நிலையில், அதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகக் கருதப்படுகிறது.

மத்திய கிழக்குப் பகுதியில் தன்னை பெரும் சக்தியாக காட்டிக்கொண்டிருந்த ஈரானுக்கு, டெஹ்ரானுக்கருகிலேயே Ismail Haniyeh கொல்லப்பட்ட விடயம் தன்மானப் பிரச்சினையாகியுள்ளது.

ஆகவே, பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, மறைமுகமாக மட்டுமின்றி, நேருக்கு நேராகவும் இஸ்ரேலைத் தாக்க ஈரான் தயாராகிவருவதாக மத்திய கிழக்கு நாடுகள் நிபுணரான Dr Anahita Motazed Rad தெரிவித்துள்ளார்.

அதாவது, மறைமுகமாக என்றால், தனது கூட்டாளிகளான ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி அமைப்பினர் மூலமாகவும், நேரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை வீசுவதன் மூலமும் பதிலடி கொடுக்க ஈரான் தயாராகிவருகிறதாம்.

அதுவும், சில மணி நேரத்துக்குள், அல்லது, இன்று அல்லது நாளை இந்த தாக்குதல் துவங்கலாம் என்கிறார் Dr Anahita.

ஆனால், இஸ்ரேலும் சும்மா இருக்கப்போவதில்லை. அது, ஈரானின் கூட்டாளிகளான ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதிக்களை மட்டும் தாக்கிக்கொண்டிராமல், அதாவது, ஆக்டோபஸின் கால்களை அல்ல, ஈரான் என்னும் பாம்பின் தலையை வெட்டி வீசத் தயாராவதாக Dr Anahita தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் போருக்கு முழுமையாகத் தயாராக இருப்பதாவும், ஈரானுக்கு மிகக்கடுமையான பதிலடிகொடுக்கத் தயாராக இருப்பதாகவும் Dr Anahita தெரிவித்துள்ளார்.

இதனால், முழுவீச்சில் போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்