ஒலிம்பிக் பதக்கங்களிற்கான வருமானவரி!!
7 ஆவணி 2024 புதன் 07:37 | பார்வைகள் : 3798
ஒலிம்பிக் பதக்கங்களுடன் வழங்கப்படும் தொகைக்கு, பிரான்சின் ஒலிம்பிக் வெற்றியாளர்கள், அதற்கான வருமான வரியினைச் செலுத்த வேண்டும்.
இவர்களிற்கான வருமான வரியினை குறைக்க வேண்டும் என, பாராளுமன்றத்தில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெறுவோரிற்கு
வெண்கலப் பதக்கத்திற்கு 20.000€
வெள்ளிப்பதக்கத்திற்கு 40.000€
தங்கப்பதக்கத்திற்கு 80.000€
என வழங்கப்படும்.
பிரான்சின் ஒலிம்பிக் வீரர்கள் இதற்கான அதிக வரியை வருமான வரியாகச் செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட 30 சதவீத வரியைச் இவர்கள் செலுத்த வேண்டும்.
பிரான்சின் ஒலிம்பிக் வீரர்கள் பெரும்பாலும் பிரான்சில் வசிக்கதாது, வெளிநாடுகளில் வசிப்பதற்கான காரணமே இந்த உச்ச வருமானவரி தான்.
30 ஜனவரி 2024 சட்டத்தின் படி வெளிநாடுகளில் வசிக்கும் பிரான்சின் ஒலிம்பிக் வீரர்கள், 15 சதவீத வருமான வரி மட்டுமே பிரான்சிற்குச் செலுத்த வேண்டும். அதுவும் பதங்கங்களிற்கான வருமான வரியை, நான்கு வருடங்களாகப் பிரித்து, அதாவது அடுத்த ஒலிம்பிக் போட்டிகளிற்கு முதல் செலுத்தி முடிக்கலாம்.