Paristamil Navigation Paristamil advert login

சென் நதியில் நீச்சல் பயிற்சிகளுக்கு அனுமதி..!

சென் நதியில் நீச்சல் பயிற்சிகளுக்கு அனுமதி..!

7 ஆவணி 2024 புதன் 09:59 | பார்வைகள் : 7122


சென் நதியில் இடம்பெற உள்ள நீச்சல் மரதோன் போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபட இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென் நதி மாசடைந்து உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதனை மறுத்துள்ள பரிஸ் நகரசபை மற்றும் ஒலிம்பிக் குழாம், இன்று புதன்கிழமை காலை முதல் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த 10 கிலோமீற்றர்கள் தூரம் கொண்ட நீச்சல் மரதோன் இடம்பெற திட்டமிட்டுள்ளது. அற்கான பயிற்சிகளை வீரர்கள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது..

வர்த்தக‌ விளம்பரங்கள்