பிரெஞ்சு குடியுரிமை நீக்கப்பட்ட நபர்! - விரைவில் வெளியேற்றம்..!
8 ஆவணி 2024 வியாழன் 07:54 | பார்வைகள் : 4582
பிரெஞ்சு சிறைச்சாலை ஒன்றில் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள முற்பட்ட ஒருவருக்கு பிரெஞ்சு குடியுரிமை நீக்கப்பட்டுள்ளது.
Bilal Taghi எனும் பிரான்ஸ்-மொரோக்கோ ஜிகாத் பயங்கரவாதிக்கே இந்த குடியுரிமை நீக்கப்பட்டுள்ளதாக நேற்று ஓகஸ்ட் 5 அம் திகதி திங்கட்கிழமை வெளியான வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Osny (Val-d'Oise) நகர சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த குறித்த நபர் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் திகதி அன்று சிறை அதிகாரிகள் இருவரை கொலை செய்ய முற்பட்டுள்ளார். ’தயேஸ்’ )Daesh) பயங்கரவாத அமைப்பின் சார்பாக இந்த தாக்குதலை மேற்கொள்ள முயன்றதாக அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
சிறைத்தண்டனை நிறைவடைந்ததும் குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் எனவும், அவருக்கு இனி எப்போதும் பிரான்சிலோ அல்லது எந்த ஒரு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்ட நாட்டிலோ குடியுரிமை வழங்கப்படமாட்டாது என அறிய முடிகிறது.