பறக்கும் டக்ஸி.. பிற்போடப்பட்டுள்ள வெள்ளோட்டம்..!

8 ஆவணி 2024 வியாழன் 09:06 | பார்வைகள் : 13009
பரிசில் பறக்கும் டக்ஸி விரைவில் வெள்ளோட்டம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த திட்டம் கைவிடப்பட்டு பிற்போடப்பட்டுள்ளது.
"taxis volants" என்பது சிறிய வகை உலங்குவானூர்தி போன்ற ஒரு வாகனம் ஆகும். பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்து செல்லும் இந்த வாகனம், பரிசில் வாடகைக்கு கொண்டுவரப்பட பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நாட்களிலேயே இதனை அறிமுகம் செய்து, வெள்ளோட்டம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெள்ளோட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனத்துக்காக இயந்திரத்துக்கு சான்றிதழ் பெறுவததில் ஏற்பட்டுள்ள தாமதங்களை அடுத்தே இந்த வெள்ளோட்டம் பிற்போடப்படுள்ளது.