Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் காட்டுத்தீ - பெண் கைது

கனடாவில் காட்டுத்தீ - பெண் கைது

8 ஆவணி 2024 வியாழன் 11:15 | பார்வைகள் : 6002


கனடாவில் காட்டுத்தீ சம்பவத்திற்கு காரணமாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வான்கூவார் தீவுகளின் போர்ட் எல்பர்னி என்னும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த காட்டுத்தீ சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவத்திற்கு இந்தப் பெண்ணின் செயற்பாடே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணுக்கு எதிராக பொலிஸார் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.


காட்டுத் தீ சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பத்தாயிரம் டொலர்கள் வரையில் அபராதமும் ஓராண்டு கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்