Paristamil Navigation Paristamil advert login

Crécy-la-Chapelle : கருஞ்சிறுத்தை குட்டி பிறப்பு..!

Crécy-la-Chapelle : கருஞ்சிறுத்தை குட்டி பிறப்பு..!

8 ஆவணி 2024 வியாழன் 16:29 | பார்வைகள் : 8390


Crécy-la-Chapelle (Seine-et-Marne) நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் கருஞ்சிறுத்தை ஒன்று குட்டி ஈன்றுள்ளது. இவ்வருடத்தில் உலகம் முழுவதும் ஐந்து கருஞ்சிறுத்தைகளே குட்டி ஈன்றுள்ளது. அவற்றில் பிரான்சில் பிறந்த குட்டியும் ஒன்றாகும்.

இந்த மகிழ்ச்சியான செய்தியினை குறித்த விலங்கியல் பூங்கா இன்று அறிவித்தது. கடந்த ஜூன் 29 ஆம் திகதி குட்டி பிறந்த போதும், பார்வையாளர்களுக்கு இம்மாதம் 6 ஆம் திகதி முதலே பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.




”சிறுத்தைக் குட்டியை பார்வையிட வருபவர்கள் அமைதியாக காத்திருக்கவும். அரிதான கருஞ்சிறுத்தையை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சிறுத்தைக் குட்டி உடனடியாக பார்வையில் படாது. காத்திருந்து பார்த்துச் செல்லவும்!’ என விலங்கியல் பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Emma எனும் சிறுத்தைக்கே இந்த குட்டி பிறந்துள்ளது. குட்டி கருஞ்சிறுத்தைக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்