Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கான வரி நீக்கம்.. பொருளாதார அமைச்சர் ஆதரவு..!

ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கான வரி நீக்கம்.. பொருளாதார அமைச்சர் ஆதரவு..!

8 ஆவணி 2024 வியாழன் 17:17 | பார்வைகள் : 5956


ஒலிம்பிக்போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வெற்றிபெறும் வீர வீராங்கனைகளுக்கு பரிசாக வழங்கப்படும் தொகைக்கு வரி ஏய்க்கப்படுகிறது. இந்த வரியினை விலக்க வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வரி விலக்குக்கு பொருளாதார அமைச்சர் Bruno Le Maire தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.

இந்த வரிவிலக்கு திட்டம் தொடர்பில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் கொண்டுவர உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் Bruno Le Maire, அதன்போதே இதனைத் தெரிவித்தார். பல ஆண்டுகள் பயிற்சியும், பல தியாகங்களையும் கொடுத்து இந்த வெற்றியினை அவர்கள் பெறுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகைக்கு வரி ஏய்ப்பது முறையற்றது என அவர் தெரிவித்தார்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரருக்கு €80,000 யூரோக்களும், வெள்ளி வெல்லும் வீரருக்கு €40,000 யூரோக்களும், வெண்கலம் வெல்பவருக்கு €20,000 யூரோக்களும் பரிசாக வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்