பங்களாதேஷ் அவாமி லீக் தலைவர்களில் சடலங்கள் கண்டெடுப்பு!
8 புரட்டாசி 2024 ஞாயிறு 06:36 | பார்வைகள் : 1728
பங்களாதேஷில் கடந்த ஒரு வாரமாக வன்முறை இடம்பெற்று வருகின்றது.
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளா்.
இந்நிலையில் 20 அவாமி லீக் தலைவர்கள் உட்பட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 29 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வன்முறையின் போது, அவாமி லீக் உறுப்பினர்களுக்கு சொந்தமான பல வீடுகள், வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் பிற இடங்களை அழித்து சூறையாடப்பட்டுள்ளன.
இதனையடுத்து, நுண்கடன் துறையில் நிபுணரான நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் (08-08-2024) பங்களாதேஷில் நியமிக்கப்படவுள்ளது.