Paristamil Navigation Paristamil advert login

மரதன் ஓட்டப்போட்டிக்காக தடைசெய்யப்படும் RN118 சாலை!

மரதன் ஓட்டப்போட்டிக்காக தடைசெய்யப்படும் RN118 சாலை!

9 ஆவணி 2024 வெள்ளி 06:50 | பார்வைகள் : 4379


ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு பகுதியாக பொது மரதன் ஓட்டப்போட்டி சனி-ஞாயிறு தினங்களில் இடம்பெற உள்ளது. இந்த போட்டிக்காக RN118 சாலை தற்காலிகமாக மூடப்பட உள்ளது.

பெண்கள் ஆண்கள் என கிட்டத்தட 40,000 பேர் இந்த மரதன் போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசில் இருந்து Versailles வரை இந்த மரதன் போட்டி இடம்பெற உள்ள நிலையில், பாதுகாப்பினை கருத்தில் கொண்டு RN118 சாலை நாளை சனிக்கிழமை அதிகாலை 3 மணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி வரை இந்த சாலை மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vélizy-Villacoublay தொடக்கம் Pont de Sèvres வரையான பகுதி வரை மூடப்பட உள்ளதாக இல் து பிரான்ஸ் மாகாணத்துக்காக சாலைகள் பாதுகாப்பு துறை (direction des routes d’Île-de-France) அறிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை ஆண்களுக்கான மரதன் போட்டிகளும், ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கான மரதன் போட்டிகளும் இடம்பெற உள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்