Paristamil Navigation Paristamil advert login

கடவுளையும் கட்சிகளுக்கான அரசியலாக பார்க்கின்றனர்: சீமான் வருத்தம்

கடவுளையும் கட்சிகளுக்கான அரசியலாக பார்க்கின்றனர்: சீமான் வருத்தம்

9 ஆவணி 2024 வெள்ளி 07:30 | பார்வைகள் : 672


தேர்தல் வரும்போது மட்டும் இவர்களுக்கு (திமுக.,வுக்கு) முருகன் மீது பக்தி, அவர்களுக்கு (பா.ஜ.,வுக்கு) ராமர் மீது பக்தி. இங்கு கடவுளையும் கட்சிகளுக்கான அரசியலாக பார்க்கின்றனர்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பா.ஜ., எப்போது முருகன் பக்கம் வந்துள்ளது? இங்க வந்தா முருகன்.. அங்க போனா ஐயப்பன்.. ஒடிசா போனா பூரி ஜெகன்னாதர். திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சி தான் என அமைச்சர் ரகுபதி பேசுகிறார். ராமர் ஆட்சி இவ்வளவு கேவலமாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? சாராயத்தால் இறப்பது, தினமும் கொலைகள் நடைபெறுவது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வன்புணர்வு செய்து கொலை செய்வது எல்லாம் இந்த ஆட்சியில் நடைபெறுகிறது. இது கடவுளின் ஆட்சியா?

தைப்பூசத்திற்கு முன்பெல்லாம் பொது விடுமுறை விடவில்லை. நான் பேசிய பிறகு, என் முயற்சியால்தான் இபிஎஸ் ஆட்சியில் தைப்பூசத்திற்கு விடுமுறை விடப்பட்டது. ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகள் அல்லாமல் இப்போது முருகன் மாநாடு நடத்துகின்றனர். இப்போது திமுக.,வுக்கு திடீரென முருகன் மீது பக்தி வந்துள்ளது.

தேர்தல் வரும்போது மட்டும் இவர்களுக்கு (திமுக.,வுக்கு) முருகன் மீது பக்தி, அவர்களுக்கு (பா.ஜ.,வுக்கு) ராமர் மீது பக்தி. இப்போது ஏன் பா.ஜ.,வினர் ராமர் பற்றி பேசுவதில்லை? கோயில் கட்டி முடித்துவிட்டார்கள், அந்த இடத்திலேயே பா.ஜ., தோற்றுவிட்டது. அதனால் ராமரை விட்டுவிட்டார்கள். இங்கு கடவுளையும் கட்சிகளுக்கான அரசியலாக பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்