கனடாவின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை
9 ஆவணி 2024 வெள்ளி 09:16 | பார்வைகள் : 2122
கனடாவில் ஒன்றாரியோ மற்றும் கியூபிக் ஆகிய மாகாணங்களில் கடுமையான மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
டெவி என்னும் வெப்பமண்டல புயல் காற்று தாக்கத்தினால் இவ்வாறு காலநிலையில் மாற்றம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து கனடா நோக்கி இந்த புயல் நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காற்று காரணமாக தாழமுக்கு நிலை உருவாகும் எனவும் இதனால் கடுமையான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு ஒன்றாறியோ மற்றும் தென் க்யூபிக் பகுதிகளில் கூடுதலான மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் இந்த சீரற்ற கால நிலை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.