போர் களத்திலரோபோ நாய்கள் பயன்படுத்தும் உக்ரைன்

9 ஆவணி 2024 வெள்ளி 09:37 | பார்வைகள் : 5762
ரஷ்யா மற்றும் உக்ரைன் உடனான போர் பல மாதங்களாக தீவிரமடைந்து வருகின்றது.
இந்த போர் நெருக்கடியில் சிக்கியுள்ள உக்ரைன், புதிய ஆயுதத்தை வெளியிட்டுள்ளது.
ராணுவத்தில் கடுமையான ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் உக்ரைன், 'BAD One' என்ற ரோபோ நாயை உருவாக்கியுள்ளது.
இவை போர்க்களத்திலும், ராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், விரைவில் ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இராணுவக் கண்காணிப்பு மற்றும் கண்ணிவெடிகளைக் கண்டறியும் அதிக ஆபத்துள்ள நடவடிக்கைகளில் BAD One-கள் பயன்படுத்தப் போவதாக அறியப்படுகிறது.
சமீபத்தில் உக்ரைனின் ஒரு அறியப்படாத பகுதியில் நடந்த செயல் விளக்கத்தில், இந்த ரோபோ நாய் அதன் ஆபரேட்டர் அனுப்பிய கட்டளைகளின்படி எழுந்து நின்று, குனிந்து, ஓடி, குதித்து காட்டியது.
செயல்நமுறை விளக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட இந்த ரோபோவில் சுமார் இரண்டு மணி நேரம் மின்சாரம் வழங்கும் பேட்டரி பொருத்தப்பட்டிருந்தது.
அவை ஏழு கிலோ வெடிமருந்துகள் அல்லது ஆயுதங்கள் மற்றும் போர்க்களத்தில் காயமடைந்த சிப்பாயின் மருத்துவப் பெட்டியை எடுத்துச் செல்ல முடியும்.
Bad One ரோபோ நாயின் மேம்படுத்தப்பட்ட மொடலாக 'BAD Two' எனும் மற்றொரு ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அதன் மாதிரியைக் காட்ட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.