ஜூன் - ஜூலை மாதங்களில் 169 பேர் நீரில் மூழ்கி பலி..!

9 ஆவணி 2024 வெள்ளி 13:26 | பார்வைகள் : 7373
கோடை காலம் ஆரம்பித்ததன் பின்னர், நீரில் மூழ்கி அகாலமரணமடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கும். கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும் 169 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூலை 31 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 612 சம்பவங்கள் இதுபோல் இடம்பெற்றுள்ளன. அவர்களில் 169 பேரினை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. எவ்வாறாயினும் கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 16% சதவீதத்தால் வீழ்ச்சியாகும்.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் -ஜூலை- ஓகஸ்ட் மாதங்களில் நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகிறமை குறிப்பிடத்தக்கது.