Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

இலங்கையில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

9 ஆவணி 2024 வெள்ளி 15:09 | பார்வைகள் : 3633


லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலைகளை இன்று (09) முதல் குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 249 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கீரி சம்பா ஒரு கிலோகிராம் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு 248 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 230 ரூபாவுக்கும், வெள்ளை கௌப்பி ஒரு கிலோகிராம் 978 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 255 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோகிராம் 280 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்