Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு வீரர்களின் அணிவகுப்பு எப்போது..? - பதிலளித்த ஜனாதிபதி மக்ரோன்..!

பிரெஞ்சு வீரர்களின் அணிவகுப்பு எப்போது..? - பதிலளித்த ஜனாதிபதி மக்ரோன்..!

9 ஆவணி 2024 வெள்ளி 15:16 | பார்வைகள் : 6531


ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுடன் வீதி உலா ஒன்று இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அது எப்போது இடம்பெறும் எனும் கேள்வில் தற்போதே விடை கிடைத்துள்ளது. 

ஒலிம்பிக் போட்டிகள் வரும் 11 ஆம் திகதி நிறைவடைய உள்ளது. அதன் பின்னர் இம்மாதம் 28 ஆம் திகதி பரா-ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி, செப்டம்பர் 8 ஆம் திகதி நிறைவடையும். பாரா ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் ஒரு வாரம் கழித்து இந்த வீதி உலா இடம்பெறும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

வீரர்கள் தங்களது பதக்கங்களுடன் பேருந்து அல்லது அதற்கென உள்ள பிரத்யேக வாகனங்களில் மக்களுக்கு முன்பாக உலா வருவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

செப்டம்பர் 14 ஆம் திகதி இந்த நிகழ்வு Avenue des Champs-Elysées வீதியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்