Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் பிரதமர் அலுவலகமான 'Matignon' இல் மீண்டும் ஒரு ஒரினச் செயற்கை பிரதமரா? Lucie Castets.

பிரான்ஸ் பிரதமர் அலுவலகமான 'Matignon' இல் மீண்டும் ஒரு ஒரினச் செயற்கை பிரதமரா? Lucie Castets.

10 ஆவணி 2024 சனி 06:54 | பார்வைகள் : 1776


பிரான்ஸ் தேசம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஒரு நிரந்தர பிரதமரையும், அவர் தலைமையிலான ஒரு அரசையும், அமைச்சர்களையும் எதிர்பார்த்துள்ள நிலையில், கடந்த மாத இறுதியில், பெருபான்மை பெறாவிடினும் அதிக ஆசனங்களை தமதாக்கிய கூட்டணிக் கட்சியான  Nouveau Front populaire  கட்சியினர் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தங்களின் புதிய பிரதமராக Lucie Castets அம்மையாரின் பெயரை அறிவித்துள்ளனர்.

பொதுமக்கள் மத்தியில் அதிகம் அறியப்படாதவரும், இருப்பினும் அறிவியல் உலகில் அறியப்பட்ட வருமான Lucie Castets அம்மையார் அறிவியல் துறையில் சிறந்த பெருளாதார நிபுணரும், நிர்வாக திறமை மிக்கவரும், போராட்டம் குணம் கொண்டவரும், இன்றைய அரசு கொண்டுவந்த ஒய்வூதிய சீர்திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருபவருமான  Lucie Castets அம்மையார் என பின்னர் தெரியவந்தது. இந்த நிலையில் Lucie Castets அம்மையார் கடந்த வாரம் 'Paris Match' எனும் வார இதழுக்கு ஒரு சிறப்பு செவ்வியை வழங்கியுள்ளார்.

அதில் "நான் யார் என்று சொல்ல விரும்புகிறேன்" என ஆரம்பிக்கும் Lucie Castets அம்மையார் தான் இரண்டரை வயது குழந்தைக்கு தாய் எனவும், தான் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளேன் எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்ததும் அரசியல் பக்கம் செயல்பாடுகள் திரும்பும் என அரசதலைவர் Emmanuel Macron அன்று அறிவித்தது போல் மீண்டும் அரசமைக்கும் அரசியல் களம் திறந்து Lucie Castets அம்மையார் பிரதமராக ஆட்சியமைக்க நேர்ந்தால், இன்றைய தற்காலிக பிரதமர் Gabriel Attal அவர்களுக்கு பின்னர் பிரதமர் அலுவலகமான 'Matignon' மாளிகைக்குள்ளே நுழையும்   இரண்டாவது ஓரினச்சேர்க்கை நபர் இவராவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்