லாசப்பலில் நிறுவப்பட உள்ள சிலைகள்!!
10 ஆவணி 2024 சனி 08:50 | பார்வைகள் : 3367
ஒலிம்பிக் விளையாட்டுக்களின் ஆரம்ப விழாவில், எழுத்தாளர்கள. புரட்சியாளர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், என வரலாற்றுக் காலம் முதல் இன்று வரையுள்ள பெண்களின் சிலைகள் செய்ன் நதிக்குள் இருந்து மேலெழுப்ப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டன.
இந்தச் சிலைகளை பரசின் போர்த்-து-லா சப்பல் விளையாட்டு அரங்கிலிருந்து (Arena Porte de La Chapelle) லாச்சப்பல் வீதி வரை (Rue de la chapelle) நிறுவ விரும்புவதாக பரிஸ் நகரபிதா அன் இதால்கோ தெரிவித்துள்ளார்.
கைவிடப்பட்ட, நம்பிக்கையிழந்த இந்தப் பகுதியில், ஒலிம்பிக் போட்டிகளின் போது, பசுமையாக்குவதற்காக 60 மில்லியன் யூரோக்கள் செல்விடப்பட்டன எனவும், அன் இதால்கோ லாச்சப்பல் வீதி குறித்துத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சிலைகளை நிறுவுவதற்கான அனுமதியைக் கோரும் கடிதத்தை, எமானுவல் மக்ரோனிற்கு, அன் இதால்கோ அனுப்பியுள்ளார்.