Paristamil Navigation Paristamil advert login

மக்களின் விடுதலைக்கான குரல் - போட்டியிலிருந்து நீக்கம்!!

மக்களின் விடுதலைக்கான குரல் - போட்டியிலிருந்து நீக்கம்!!

10 ஆவணி 2024 சனி 10:24 | பார்வைகள் : 5826


ஆபகானிஸ்தானில், தலிபானின் கொடுமையான ஆட்சியிலிருந்து தப்பித்து, ஸ்பெயின் வந்துசேர்ந்த மனிஷா தலாஸ் (Manizha Talash), ஒலிம்பிக்கில் பிரேக் நடனப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.*

இவர் தனது போட்டியின் போது. தனது உடையின் மேல், ஆப்கான் பெண்களை விடுதலை செய்யுங்கள் «Free Afghan women» என்ற வாசகம் பொறித்த உடையுடன் நடனமாடி உள்ளார்.

ஒலிம்பிக் விதிகள் 50 இன் படி போட்டியிலோ, அல்லது, பதகங்கள் வழங்கும் நிகழ்விலோ அரசியல் வாசகங்கள் உடைகளில் அணியக் கூடாது  என்பதைக் காரணம் காட்டி. மனிஷா தலாஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டமையால், இந்தப் போட்டியில் நெதர்லாந்திற்காகப் போட்டியிட்ட இந்தியப் பெண் பதக்கம் வென்றிருந்தார். 

தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், தனது கருத்தைச் சர்வதேச அரங்கில் வெளியிட்டமை, தனக்கு மிகவும் மகிழ்ச்சி என மனிஷா தலாஸ் தெரிவித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்