Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக்கில் தங்கம்.. இணையத்தளத்தில் அவதூறு.. வழக்குப் பதிவு செய்த வீராங்கனை..!

ஒலிம்பிக்கில் தங்கம்.. இணையத்தளத்தில் அவதூறு.. வழக்குப் பதிவு செய்த வீராங்கனை..!

10 ஆவணி 2024 சனி 20:01 | பார்வைகள் : 6246


கடந்தவாரம் அல்ஜீரியாவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீராங்கனை Imane Khelif குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்றிருந்தார். ஆனால் அவர் மீது இணையவாசிகள் பல்வேறு அவதூறுகள் பரப்பியிருந்தனர். அவர் பெண்ணே அல்ல என்பது தான் அதன் சாரம்சம்.

அவர் பிறப்பால் பெண் இல்லை எனவும், அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்படவேண்டும் எனவும் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்த அவதூறுகளுக்கு எதிராக போராட அவர் முடிவு செய்துள்ளார். இணையவழி துன்புறுத்தல்களுக்கு எதிராக (cyberharcèlement) வழக்கு தொடுத்துள்ளார். இணையத்தளத்தில் வெறுப்பு பேச்சினால்  Imane Khelif பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் Nabil Boudi, இன்று சனிக்கிழமை பரிசில் வைத்து தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்