ஒலிம்பிக் போட்டிகள் பொருளாதார ரீதியில் வெற்றி!

11 ஆவணி 2024 ஞாயிறு 09:07 | பார்வைகள் : 7171
ஒலிம்பிக் போட்டிகள் பொருளாதார ரீதியில் பெரும் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதிகள், உணவகங்கள் உட்பட சுற்றுலாத்துறை பெரும் இலாபமீட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னர் எந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் இல்லாத அளவு 9.5 மில்லியன் நுழைவுச் சிட்டைகள் விற்பனையாகியிருந்தது. அதேவேளை, பரிசில் உள்ள விடுகளில் இந்த பருவகாலத்தை விட 16% சதவீதம் அதிக பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், இல் து பிரான்சுக்குள் உள்ள அருங்காட்சியகங்கள், உணவகங்கள் போன்றவற்றுக்கு 20% சதவீதம் அதிக பயணிகள்/பார்வையாளர்கள் வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான விடுதிகளில் 25% சதவீத கூடுதல் வாடிக்கையாளர்கள் வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, பொது போக்குவரத்துக்களை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. இந்த தகவல்களை பிரான்சின் அமைச்சர் பிரதிநிதி (ministre déléguée) Olivia Grégoire நேற்று சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.