■ இவ்வருடத்தின் அதிகூடிய வெப்பம்.. நாளை பதிவாகலாம் என எச்சரிக்கை!
11 ஆவணி 2024 ஞாயிறு 12:59 | பார்வைகள் : 2127
நாளை ஓகஸ்ட் 12 ஆம் திகதி திங்கட்கிழமை இவ்வருடத்தின் அதிகூடிய வெப்பம் பதிவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிசில் 38°C வரை வெப்பம் பதிவாகலாம் எனவும் ஆனால் 43°C போன்று வெப்பம் உணரமுடியும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி பிரான்சில் 39.5°C வெப்பம் பதிவாகியிருந்தது. அந்த அதிகூடிய வெப்பம் நாளை முறியடிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எளிதில் நோய்வாய்ப்படும் மக்கள் வெளியில் நடமாடுவதை முடிந்தவரை தவிக்கும்படி கோரப்பட்டுள்ளது. தலைவலி, தோல் வியாதிகள், தோல் எரிவு, மயக்கம் போன்ற சுகவீனம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.