கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இளைஞன் உயிரிழப்பு
11 ஆவணி 2024 ஞாயிறு 12:27 | பார்வைகள் : 784
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் , யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியில் பூநகரி பகுதியில் இன்றைய தினம் காலை இடம்பெற்ற விபத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளான்.
யாழ்ப்பாணத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளானதில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்