Paristamil Navigation Paristamil advert login

உயிரை பணயம் வைத்து பயணம்.. 52 அகதிகள் மீட்பு..!

உயிரை பணயம் வைத்து பயணம்.. 52 அகதிகள் மீட்பு..!

12 ஆவணி 2024 திங்கள் 09:00 | பார்வைகள் : 5880


உயிரை பணயம் வைத்து ஆங்கிலக்கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி பயணித்த 52 வரையான அகதிகள் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டு, கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

நேற்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பா-து-கலேயின் quayside பகுதி கடற்கரையில் இருந்து படகொன்றில் 50 பேர் பயணித்துள்ளனர். சிறிய மீன்பிடி படகில் 50 பேர் பயணிப்பது மிகவும் உயிராபத்தான பயணமாகும்.

கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் கண்கணில் அவர்கள் தென்பட, உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அனைவரையும் கப்பலில் ஏற்றி கரைக்கு கொண்டுசென்றனர்.

மொத்தமாக அவர்கள் 50 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இடம்பெற்ற சிலமணொநேரங்கள் கழித்து இருவருடன் பயணித்த மற்றுமொரு படகும் வழிமறிக்கப்பட்டது. அவர்களும் கரைக்கு அழைத்துவரப்பட்டனர்.

மொத்தமாக நேற்றைய இரவில் 52 பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக பிரெஞ்சு கடற்படையினர் தெரிவித்தனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்