ரூ.15 கோடி மோசடி வழக்கு- தோனிக்கு கெடு விதித்த BCCI
12 ஆவணி 2024 திங்கள் 10:12 | பார்வைகள் : 822
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு எதிராக ரூ.15 கோடி மோசடி தொடர்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதியில் வசிக்கும் ராஜேஷ் குமார் மௌர்யா என்பவரால் BCCI நெறிமுறை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தோனி மீது ராஞ்சியில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் ரூ.15 கோடி மோசடி வழக்கு தொடர்பானது.
இந்த வழக்கில் தோனியின் முன்னாள் வணிகக் கூட்டாளியான மிஹிர் திவாகர், சௌம்யா தாஸ் மற்றும் Aarka Sports Management Pvt Ltd ஆகியோருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு உள்ளது.
ராஞ்சி சிவில் நீதிமன்றத்தில் மார்ச் 20, 2024 அன்று இந்த வழக்கின் தொடக்க விசாரணையில் வழக்கு முதன்மையானதாக கருதப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம் மிஹிர் திவாகர் மற்றும் மற்ற குற்றவாளிகளுக்கு சம்மன்ஸ் அனுப்பியுள்ளது.
BCCI நெறிமுறை ஆணைக்குழு, இந்த விவகாரம் குறித்து மகேந்திர சிங் தோனியிடம் ஆகஸ்ட் 30க்குள் பதில் அளிக்க கேட்டுள்ளது.
மேலும் புகார் அளித்த ராஜேஷ் குமார் மௌர்யாவை செப்டம்பர் 16க்குள் பதில் அளிக்க கேட்டுள்ளது.