Paristamil Navigation Paristamil advert login

திட்டமிட்டபடி 'தங்கலான்' ரிலீஸ் ஆகுமா?

 திட்டமிட்டபடி  'தங்கலான்' ரிலீஸ் ஆகுமா?

12 ஆவணி 2024 திங்கள் 10:47 | பார்வைகள் : 462


விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேர்ந்த அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டார் என்பதும் சில நாட்களில் அவர் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொத்துக்கள் சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அர்ஜுன் லால் சுந்தரிடம் ஸ்டுடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 10 கோடி 35 லட்சம் கடன் வாங்கி இருந்தனாக தெரிகிறது.

இந்த தொகையை வட்டியுடன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இதனை அடுத்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவால் ஆனவராக அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ’தங்கலான்’ படத்தை வெளியிடும் முன் ஒரு கோடி ரூபாய் நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜா டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அதன் பிறகு படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

அதேபோல் இந்நிறுவனத்தின் இன்னொரு படமாக ’கங்குவா’ படத்தை வெளியிடுவதற்கு முன் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்