நியூசிலாந்தை விட்டு வெளியேறும் மக்கள்

14 ஆவணி 2024 புதன் 10:47 | பார்வைகள் : 6161
நியூசிலாந்தில் வேலையின்மை அதிகரிப்பு, வட்டி விகித உயர்வு, பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் வரலாறு காணாத வகையில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக நியூசிலாந்து அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் காலாண்டில் சுமார் 131,200 பேர் நியூசிலாந்தை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறினர் அந்நாடு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
நியூசிலாந்துக்குக் குடியேறுபவர்களை விட அந்நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது என்றும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
இதற்கு அந்நாட்டின் பொருளியல் வீழ்ச்சியே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் , வாழ்க்கைச் செலவீனம், வட்டி விகிதம் அதிகரிப்பு, குறைவான வேலை வாய்ப்புகள் ஆகியவற்றால் விரக்தியடைந்த நியூசிலாந்து நாட்டவர்கள் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த பிற நாடுகளை நோக்கிச் செல்வதாகப் பொருளியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1