Paristamil Navigation Paristamil advert login

குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம்

குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம்

16 ஆவணி 2024 வெள்ளி 08:38 | பார்வைகள் : 1724

குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 

குரங்கம்மை பாதிப்பு என்பது ஒரு வகை வைரசால் ஏற்படக்கூடிய தொற்று நோய் ஆகும்.

ஆபிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதுவரை 524 பேர் பலியாகி உள்ளதுடன் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆபிரிக்க நாடுகளான கொங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது,

இந்த வைரசானது ஆபிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என கூறினார். 

இந்த சூழலில் உலக சுகாதார ஸ்தாபனம், குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக நேற்று முன்தினம் 14 அறிவித்தது.

ஆபிரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக சுவீடன் நாட்டில் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரசானது, கிளாட் 1 என்ற வகையைச் சேர்ந்தது. 

இதுபற்றி உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பிய மண்டலத்திற்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுவீடனில் கிளாட் 1 வைரசின் பரவலானது, நம்முடைய உலகில் ஒன்றோடொன்று நாம் தொடர்பில் இருக்கிறோம் என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டு ஆகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்