Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தில் ஒளிரவிடப்பட உள்ள சிறப்பு மின்விளக்குகள்!

ஈஃபிள் கோபுரத்தில் ஒளிரவிடப்பட உள்ள சிறப்பு மின்விளக்குகள்!

21 புரட்டாசி 2024 சனி 11:06 | பார்வைகள் : 5130


இளம் வயதில் ஏற்படும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்காக இன்று சனிக்கிழமை இரவு ஈஃபிள் கோபுரத்தில் சிறப்பு விளக்குகள் ஒளிரவிடப்பட உள்ளன.

இரவு 8.30 மணி அளவில் இந்த மின் விளக்குகள் ஒளிரவிடப்பட உள்ளதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது. பிரான்சில் ஒரு வருடத்துக்கு 2,500 சிறுவர்கள் இந்த இள வயது புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 80% சதவீதமானவர்கள் குணமடைகின்றனர்.

ஆனால் இங்கே வருடத்துக்கு 450 சிறுவர்கள் உயிரிழக்கின்றனர். அவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் இந்த மரணங்கள் சம்பவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் ஒரு அங்கமாகவே இந்த விழிப்புணர்வு நடவடிக்கையினை பரிஸ் நகரசபை ஈஃபிள் கோபுரம் வழியாக முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்