போர்துக்கல்லில் பெரும் காட்டுத்தீ.. பிரான்சில் பாதிப்பு!
21 புரட்டாசி 2024 சனி 13:05 | பார்வைகள் : 3981
போர்த்துக்கல்லில் கடந்த வார சனிக்கிழமை ஆரம்பித்த காட்டுத்தீயின் தாக்கம், பிரான்சில் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
போர்த்துக்கல்லில் பெரும் கரு மேகங்கள் வானை முற்றுகையிட்டுள்ளன. அந்த கருமேகங்கள் மற்றும் காற்றில் கலந்துள்ள துகள்கள் பிரான்சின் மேற்கு பிராந்தியங்களில் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
”சஹாரா பாலைவன துகள்கள் ஒரு பருவகாலத்தில் பிரான்சில் தாக்கம் செலுத்துவது போல், இந்த காட்டுத்தீயினால் காற்றில் கலந்த துகள்களும் பிரான்சில் பாதிப்பு ஏற்படுத்தும்” என தீ தொடர்பான இயற்பியல் நிபுணர் Dominique Morvan தெரிவித்துள்ளார்.
வயதானவர்கள், சுவாசப்பிரச்சனை மற்றும் எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படி கோரப்பட்டுள்ளது.
போர்த்துக்கல்லில் இதுவரை 10,000 ஹெக்டேயர்கள் காடு தீக்கிரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.