யாழ் மாவட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிலை!
22 புரட்டாசி 2024 ஞாயிறு 06:01 | பார்வைகள் : 2058
நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரையில் 5 மாவட்டங்களின் முழுமையான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 16,688 வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சுயேட்சை வேட்பாளர் பி. அரியநேத்திரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச 93,482 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், 84,558 வாக்குகளைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்க மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் 645 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அதேநேரம் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
வன்னியில் சஜித் பிரேமதாச மொத்தமாக 95,422 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
52,573 வாக்குகளைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இரண்டாம் இடத்திலும், 36,377 வாக்குகளைப் பெற்றுள்ள பி. அரியநேரத்திரன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
வன்னியில் அனுரகுமார திஸாநாயக்க 21,412 வாக்குகளையும், நாமல் ராஜபக்ச 1,079 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
காலி மாவட்டத்தின் முழுமையான வாக்கு முடிவுகளும் வெளியாகியுள்ளன.
இதன்படி காலி மாவட்டத்தில் 3 இலட்சத்து 66,721 வாக்குகளைப் பெற்று அனுரகுமார திஸாநாயக்க அங்கு முன்னிலை வகிக்கிறார்.
சஜித் பிரேமதாச காலியில் 1 இலட்சத்து 89, 555 வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க ஒரு இலட்சத்து 7,336 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.