Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு மண்ணில் சர்வதேச காவல்துறை!

பிரெஞ்சு மண்ணில் சர்வதேச காவல்துறை!

2 ஆவணி 2020 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 19751


 பிரான்சின் பெரு நகரங்களில் ஒன்றாகிய லியோன் நகருக்குச் சென்றோமானால், அங்கே உலகின் 185 நாடுகளைச் சேர்ந்த காவல்துறை உறுப்பினர்களை நாம் காண முடியும். அதாவது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு பணிபுரிகிறார்கள். அவர்களதான் ‘இண்டபோல்’ எனப்படும் ‘சர்வதேச காவல்துறையினர்’. 
 
இவர்களின் தலைமையகம் லியோனில் உள்ளது. உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அங்கே சட்டத்தைக் கையில் எடுப்பது இவர்கள் தான். லியோனில் இருந்து பறக்கும் கட்டளைகள், பத்தாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால், அடுத்த நொடியே செயல்படுத்தப்படும். 
 
International Criminal Police Organization என ஆங்கிலத்திலும் Organisation internationale de police criminelle என பிரெஞ்சிலும் அழைக்கப்படும் இந்தக் காவல்துறையின் கூட்டு கட்டமைப்பு, 1923 ஆம் ஆண்டு உருவானது. 
 
தென்கொரியாவைச் சேர்ந்த காவல்துறை உறுப்பினராகிய Kim Jong Yang என்பவர்தான் இதன் இப்போதைய இயக்குனராக இருக்கிறார். 
 
உலகின் கலை, கலாச்சாரங்களுக்கு மட்டுமல்ல, காவல்துறைக்கும் பிரான்ஸ்தான் தலைநகரம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்