பிரான்சின் மற்றுமொரு இரும்புப் பெண்மணி!!
29 ஆடி 2020 புதன் 10:30 | பார்வைகள் : 19574
2017 ம் ஆண்டு ஜூன் மாதம். அப்போதைய இராணுவ அமைச்சரை பதவி விலகும்படி அரசு கட்டளை இட்டது. அது எதற்காக என்றால்.. அது ஒரு தனிக்கதை. இன்னொருநாள் பிரெஞ்சுப் புதினத்தில் வரப்போகும் கதை. ஆனால் இன்று நாம் பார்க்கப் போவது வேறொரு கதை.
அவர் பதவி விலகிவிட்டார். இப்போது புதிய இராணுவ அமைச்சரை நியமிக்க வேண்டும். ‘இராணுவ அமைச்சர்’ என்றால் அது பெரும் பதவி அல்லவா? முன்னாள் இராணுவ ஜெனரலையோ, அல்லது முன்னாள் துணை இராணுவ அமைச்சரையோ தான் நியமிப்பது உலக வழக்கம்.
ஆனால் ஜனாதிபதி மக்ரோன் நியமித்த இராணுவ அமைச்சர் அப்படியான எந்தப் பின்னணியும் கொண்டவர் அல்ல. ‘இராணுவமா? அது எந்தக் கடையில் விக்குது?’ என்று கேட்கக்கூடிய அளவுக்கு, இராணுவத்தோடு எந்த சம்மந்தமும் இல்லாத ஒருவரை மக்ரோன் நியமித்தபோது எல்லோருக்கும் அதிர்ச்சி.
ஆனால் புதிதாக வந்தவர் சாதாரண ஆள் கிடையாது. அவர் ஒரு பெண். முன்பு அவர் வகித்த பதவிகள் - வரவு செலவுத் திட்ட அரச செயலாளர் மற்றும் சில பல பல்தேசிய கம்பெனிகளின் மத்தியகுழு உறுப்பினர். அவ்வளவும் தான்.
அங்கிருந்துவிட்டு திடீரென்று இராணுவ அமைச்சர் ஆனால் யாருக்குமே அதிர்ச்சி வரும் இல்லையா?
சரி புதிதாக வந்த Florence Parly அப்படி என்னதான் சாதித்தார்?
நாளை..!!!!