கனடாவில் முதலீட்டு மோசடிகள் - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

24 புரட்டாசி 2024 செவ்வாய் 14:03 | பார்வைகள் : 6125
பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதலீட்டு நிறுவனம் ஒன்றின் பெயரை பயன்படுத்தி கனடாவின் பிரம்டன் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 170000 டாலர்கள் மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனத்திடம் போலியான தகவல்களை வழங்கி இணைய வழியில் குறித்த நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் பாதிக்கப்பட்டு பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார்.
மெய்யாகவே ஒரு நிறுவனத்திடம் முதலீடு செய்வதாக கருதி குறித்த நபரிடம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் டாலர்களை இந்த நபர் ஏமாந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பணத்தை முதலீடு செய்த நபர் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு வினவியபோது அவ்வாறு எவ்வித முதலீடுகளும் செய்யப்படவில்லை என்பதை அறிந்துகொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தம்மை ஏமாற்றிய நபருக்கு எதிராக குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ளார்.
62 வயதான ஜான் மார்ஷல் என்ற நபரே இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இணைய வழியில் முதலீடு செய்பவர்கள் மிகுந்த அவதாரத்துடன் செயல்பட வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
முதலீடு செய்வதற்கு முன்னதாக கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் அல்லது ஒன்றாரியோ பாதுகாப்பு ஆணைக்குழு என்பனவற்றிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது பொருத்தமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடியில் வேறு எவரேனும் சிக்கியிருந்தால் அது தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3