மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நூதன செயல்.. ஒருவர் கைது!!
24 புரட்டாசி 2024 செவ்வாய் 14:21 | பார்வைகள் : 4965
மின்சாரக்கட்டணத்தைக் குறைப்பதற்கு அதன் அறவீடு பெட்டியை (compteur Linky) மாற்றி அமைத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Valenciennes நகரில் வசிக்கும் குறித்த நபர் இதனை ஒரு தொழில் போன்று நீண்டகாலமாக மேற்கொண்டுள்ளார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் வீடுகளில் இந்த compteur Linky பெட்டியில் சில மாறுதல்களைச் செய்து, மின்சாரக்கட்டணத்தை 50 தொடக்கம் 70% சதவீதம் வரை குறைக்கும் வழியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இதற்காக 300 யூரோக்களில் இருந்து 500 யூரோக்கள் வரை கட்டணமாக அறவிட்டுள்ளார்.
வர் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி கைது அவர் செய்யப்பட்டார். சமூகவலைத்தளமூடாக அவர் விளம்பரம் செய்து, நாட்டின் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இதனை செய்துகொடுத்துள்ளார்.
அவரால் மின்சாரவாரியத்துக்கு இதுவரை குறைந்தது 150,000 யூரோக்கள் நஷ்ட்டம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.